ஜப்பானில் மணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய அதிநவீன புல்லட் புகையிரதம் வெற்றிகரமாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது . ஜப்பானில் அடுத்த தலைமுறைக்கான அதிநவீன புல்லட் புகையிரதத்தின் தயாரிப்பினை அந்நாட்டு கிழக்கு புகையிரத நிர்வாகம் முடித்துள்ளது. இந்த புல்லட் புகையிரதத்தின் முகப்பு பகுதி கூர்மையான மூக்கினை போன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகப்பு பகுதிக்கு 91 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது.
இந்த அதிநவீன புகையிரதம் ஒரு மணி நேரத்திற்கு 320 கி.மீ வேகத்தில் செல்லக் கூடிய இந்த புகையிரதம நேற்று முன்தினம் ஜப்பானின் வடக்கு பகுதிகளான செண்டாயில் இருந்து மொரியோகா வரை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
முதன்முறையாக இந்த புல்லட் புகையிரதத்தின்; சோதனை வெற்றிகரமாக முடிந்தது எனவும் ஏனைய சோதனைகள் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் புகையிரத நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த புல்லட் புகையிரதம் 2030-2031ம் ஆண்டு மக்கள் பயணம் செய்ய ஏதுவாக சேவைக்கு விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
#Japan #tests #bullettrain #ஜப்பானில் #புல்லட்புகையிரதம் #சோதனை