அணைகளில் நீர்த் தேக்கம் மிக மோசமாக குறைந்து வரும் நிலையில் தமிழகம் உட்பட ஆறு மாநிலங்களுக்கு வறட்சி குறித்த எச்சரிக்கையையும் ஆலோசனைகளையும் மத்திய அரசு வழங்கியுள்ளதுடன் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும்படியும் அறிவுறுத்தியுள்ளது
வறட்சியைச் சமாளிப்பதற்கான ஆலோசனைகள் மே 17ஆம் திகதியன்று தமிழகத்துக்கு வழங்கப்பட்டதைத்தொடர்ந்து குஜராத், கர்நாடகம், மகாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கும் வறட்சிக்கான எச்சரிக்கையும் ஆலோசனைகளும் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய நீர் ஆணையகம் தெரிவித்துள்ளது
கடந்த 10 ஆண்டுகளில் அணைகளிலிருந்த சராசரி நீர் இருப்பை விட தற்போது 20 வீதம் குறைவாக உள்ளதனால அணைகளில் மீண்டும் நீர் நிரம்பும் வரை ஆறு மாநிலங்களிலும் நீரை குடிப்பதற்கு மட்டும் பயன்படுத்தும்படி மத்திய நீர் ஆணையகம் அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக சென்னை மக்கள் ஷவர்களில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டுமெனவும் நீர் வீணடிக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டுமெனவும் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
#தமிழகம் #வறட்சி #எச்சரிக்கை ‘#thamilnadu #drought