என் அம்மா டயானா இறந்தபோது மற்ற எந்த வலியை விடவும் கொடிய மன வலியை அனுபவித்தேன் என இளவரசர் வில்லியம் மனம் திறந்து பேசி உள்ளார். இங்கிலாந்து இளவரசி டயானா, தனது 36-வது வயதில் 1997-ம் ஆண்டு, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த விபத்தில் உயிரிழந்திருந்தார்
இளவரசர் சார்லஸ்சை பிரிந்து வாழ்ந்த நிலையில் அவர் இறந்தது பல்வேறு சர்ச்சைகளை அப்போது கிளப்பியிருந்த நிலையில் சார்லஸ்-டயானா தம்பதியின் மகன்களான இளவரசர்கள் வில்லியமும், ஹாரியும் தங்கள் தாயின் மரணம் குறித்து வெளிப்படையாக பேசியது இல்லை.
இந்த நிலையில் தற்போது பி.பி.சி. டி.வி. தயாரித்துள்ள மனநலம் பற்றிய ஆவணப்படத்தில் மனம் திறந்து பேசிய போதே இளவரசர் வில்லியம் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடினமான தருணங்களில் இங்கிலாந்து மரபுப்படி வாய் திறந்து பேசுவதில்லை. சற்று அதில் இருந்து வெளியே வர வேண்டும். நாம் ஒன்றும் ரோபோக்கள் இல்லை. வாய் திறந்து நமது உணர்வுகளை சொல்லியாக வேண்டியிருக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுபற்றி நான் நிறைய யோசித்துப் பார்த்து இருக்கிறேன். நான் ஏன் அப்படி உணர்ந்தேன் என்பதை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். ஆனால் மிக இளம் வயதில் நாம் இருக்கிறபோது, நமது அன்புக்குரியவர்கள் மரணத்தை தழுவினால் அடைகிற மன வலி பிற வலிகளைப்போல இல்லை என அவர் தெரிவித்துள்ளார்
இந்த ஆவணப்படம் பி.பி.சி. தொலைக்காட்சி அலைவரிசையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது
#princewilliam #diana #அம்மா #டயானா #மனவலி #இளவரசர்வில்லியம்