இந்திய இராணுவத்தால் தோற்கடிக்க முடியாத புலிகளை இலங்கை இராணுவம் வெற்றி கொண்டது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். போர் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகள் கடந்துள்ளதை முன்னிட்டு நாடாளுமன்ற மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய ஆவர், 30 வருட யுத்தத்தைக் காட்டிலும் மாறுபட்ட தன்மையைக் கொண்ட தற்போதைய பயங்கரவாத நிலைமையை அழிப்பதற்கான முக்கியப் பொறுப்பு, நாட்டின் புலனாய்வு துறையிடம் உள்ளதாக குறிப்பிட்டள்ளார்.
இலங்கையானது நீண்டகால யுத்தத்துக்கு பழகிய நாடாகும். 30 வருடங்களாக உள்நாட்டு யுத்தத்தில் இராணுவம் வெற்றிக் கொண்டிருந்தது. கடந்த 10 ஆண்டுகளாக இலங்கை சமாதானமாக இருந்த போதும், கடந்த மாதம் 21ம் திகதி மிலேச்சத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த பயங்கரவாதமானது, உள்நாட்டு பயங்கரவாதம் அன்றி, சர்வதேச பயங்கரவாத நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இதனை முறியடிப்பதற்கும் இலங்கையின் முப்படையினருக்கும், காவற்துறையினரும், புலனாய்வுப் பிரிவுக்கும், சிவில் பாதுகாப்பு தரப்பினருக்கும் இயலுமை உண்டு.
இந்த நிலையில் நாட்டில் யுத்தத்தை வெற்றிக் கொள்வதற்காக தங்களது உயிர்நீத்த படையினருக்கு தமது கௌரவத்தை செலுத்துவதாகவும்” ஜனாதிபதி தெரிவித்துள்ளார். #maithripalasirisena #SriLankaArmedForces #விடுதலைப்புலிகள்