Home இலங்கை புலிகளை அழிக்க உலகம் உறுதுணையானது – 2009 மே 19 முற்பகல் பிரபாகரன் உயிரிழந்தமை உறுதியானது…

புலிகளை அழிக்க உலகம் உறுதுணையானது – 2009 மே 19 முற்பகல் பிரபாகரன் உயிரிழந்தமை உறுதியானது…

by admin


விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 திகதி முற்பகல் உயிரிழந்தார் என்பது உறுதியானது என எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். போர் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகள் கடந்துள்ளதை முன்னிட்டு, கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் ஆற்றிய விசேட உரையில்,

அமெரிக்காவின் FBI அமைப்பு உலகில் மிகவும் பயங்கரமான பயங்கரவாத அமைப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பை 2008 ஆம் ஆண்டு ஜனவரி அன்று அறிவித்தது. விடுதைலை புலிகளை முற்றாக ஒழிப்பதற்கு அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் துணை புரிந்தன.

அண்மைய கால வரலாற்றில் பயங்கரவாத அமைப்பொன்றை முற்றாக அழித்த ஒரே நாடு இலங்கை என்றும் அவர் பெருமிதம் கொண்ட மகிந்த ராஜபக்ஸ, யுத்தத்தின் போது அமெரிக்கா இலங்கைக்கு உதவியதுடன் ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பு என 2006 ல் பெயரிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு அமெரிக்காவால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் 2007 ல் புலிகளின் ஆயுதங்கள் கடத்தப்படும் கப்பல்களை அழிக்க முடிந்தது என்றும், இதன் பின்னர் பெப்ரவரி 2009 இல் அமெரிக்காவில் அரசாங்கம் மாறியதால் அதன் பின்னரான அணுகுமுறை மாற்றியமைக்கப்பட்டது என்றும் கூறினார்.

இதேவேளை நடந்து முடிந்த போரில் முப்படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் என 25 ஆயிரத்து 367 படையினர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான சாதாரண காவற்துறை அதிகாரிகள், சாதாரண சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஆயிரக்கணக்கிலும் அரசியல் தலைவர்கள் பலரும் இந்த போர் காரணமாக உயிரிழந்தனர் என சுட்டிக் காட்டியுள்ளார்.

தனது அரசாங்கம் வெளிநாட்டு அழுத்தங்களை பொருட்படுத்தாது போரை முடிவுக்கு கொண்டு வந்தது என தெரிவித்த அவர் இதுதொடர்பாக தெரிவிக்காமல் போரை முடித்தமையே சிலருக்கு பிரச்சினையாக அமைந்தது என்றும் கூறினார். குறிப்பாக சீனா இலங்கைக்கு உதவுவது வெளிநாட்டு சக்திகளுக்கு பிரச்சினையாக அமைந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். #விடுதலைப்புலிகள்  #வேலுப்பிள்ளபிரபாகரன் #mahindarajapaksa

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More