இந்தோனேசிய ஜனாதிபதித் தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி பெற்று தனது பதவியை தக்க வைத்துள்ளதாக, தேர்தல் ஆணையகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தோனேசியாவில், கடந்த மாதம் 17-ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணும் பணி வார கணக்கில் இடம்பெற்ற நிலையில் 57 வயதான ஜோகோ விடோடா வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விடோடோவிற்கு 55.5 சதவிகித வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிக்கு 44.5 சதவிகித வாக்குகளும் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது
முன்னதாக, தேர்தலில் மோசடி நடவடிக்கைகள் அதிகம் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த போதிலும் அவ்வாறு மோசடிகள் எவையும் இடம்பெறவில்லை என இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
#indonesiya #presidentelection #JokoWidodo #won #இந்தோனேசிய #ஜனாதிபதித்தேர்தல்