முன்பு கணித்ததைவிட சர்வதேச அளவில் கடல்மட்டம் விரைவாக உயர்வதாக தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் இதற்கு க்ரீன்லாண்ட் மற்றும் அண்டார்டிகா விரைவாக உயர்வதுதான் காரணம் எனச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
2100ம் ஆண்டு கடல் மட்டம் ஒரு மீற்றருக்கும் குறைவான அளவே உயரும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் அதனைவிட இரண்டு மடங்கு உயருமென தற்போது ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கடல் மட்டம் உயர்வதன் காரணமாக 1.79 மில்லியன் சதுர கிலோமீற்றர் நிலம் , அதாவது லிபியா தேசத்தின் நிலப்பரப்பு அளவிலான நிலம் நீரில் மூழ்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
இதன் விளைவாக லட்சக்கணக்கானோர் தங்கள் வாழ்விடங்களை இழப்பார்கள் எனவும் லண்டன், நியூயோர்க், ஷாங்காய் போன்ற முக்கிய நகரங்களும் பாதிப்புக்குள்ளாகும் எனவும் மக்கள் வசிப்பதற்கு லாயக்கற்ற நாடாக பங்களாதேஸ் மாறும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
#கடல்மட்டம் #உயர்கின்றது #வாழ்விடங்களை #இழக்கும்அபாயம் #SeaLevel #Rise