இலங்கை பிரதான செய்திகள்

தந்தையின் உழவு இயந்திரத்தை இயக்கிய ஆறு வயது சிறுவன் பலி

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.


கிளிநொச்சி கோணாவில் பகுதியில் நேற்று திங்கள் கிழமை மாலை தந்தையின் உழவு இயந்திரத்தை இயக்கிய போது ஏற்பட்ட விபத்தில் ஆறு வயது மகன் இறந்துள்ளார். குறித்த சம்பவம் பற்றி தெரியவருவது குறித்த சிறுவனின் தந்தை வயலுக்கு சென்று விட்டு வீட்டில் உழவு இயந்திரத்தை திறப்புடன் நிறுத்தி வைத்து விட்டு சாப்பிட்டுக்கொண்டு நின்றசமயம் குறித்த சிறுவன் உழவியந்திரத்தில் ஏறி உழவு இயந்திரத்தை இயக்கியுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் உழவியந்திரம் இயங்கி அருகில் உள்ள மரத்துடன் மோதியபோது குறித்த சிறுவன் தவறி வீழ்ந்து சில்லில் நசியுண்டு உயிரிழந்துள்ளார் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.குறித்த சிறுவன் கிளிநொச்சி கோணாவில் காந்தி ஆரம்பவித்தியாலயத்தில் தரம் ஒன்றில் கல்வி கற்றுவரும் விசேட தேவையுடைய மாணவன் வகுப்பில் மிகவும் துடிப்புள்ள மாணவன் என வகுப்பாசிரியர் குறிப்பிடுகின்றார்.

#தந்தை  #உழவுஇயந்திரத்தை  #சிறுவன்   #tractor

 

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.