பயங்கரவாதிகள் பாராளுமன்றத்திற்கு குண்டுவைக்க முயற்சித்தால் பிரதமர் சபையில் இருக்கும் போதே அது இடம்பெற வேண்டும் என வேண்டிக்கொள்வதாக எதிர்க்கட்சி உறுப்பினர் விமல் பாராளுமன்றில் தெரிவித்தார். கடந்த ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட பாராளுமன்ற ஊழியர் குறித்தும் ஏற்பட்ட பாதுகாப்பு சிக்கல்கள் குறித்தும் சபையில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
பாராளுமன்றம் இன்று கூடிய வேளையில், சபாநாயகர் சபையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவித்தார். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த விசாரணைகளில் பாராளுமன்ற ஊழியர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
நாளாந்தம் எமது அவதானம் இதில் உள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார். இதன்போதே எதிர்கட்சி உறுப்பினர் விமல் வீரவன்ச இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
#பிரதமர் #பாராளுமன்றில் #குண்டு #சபாநாயகர் #eastersundaylk