தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது கொல்லப்பட்டவர்களுக்கு இன்று நினைவு அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 3 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த ஆண்டு மே மாதம் 22ம் திகதி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்திய பொது மக்கள் மீது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் கொல்லப்பட்டதுடன் 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகின்ற நிலையில் இந்த சம்பவத்தரல் உயிர் இழந்தவர்களுக்கு பல்வேறு இடங்களிலும் நினைவு அஞ்சலி கூட்டங்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டு உள்ளது.
இதனையடுத்து தூத்துக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு காவல்துறையினர் குவிக்க்பபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#ஸ்டெர்லைட் #போராட்டத்தில் #கொல்லப்பட்டவர்களுக்கு #அஞ்சலி #sterlite #protest