2013 ஆம் ஆண்டு பாடசாலை பணியாளர்கள் 8 ஆம் தரத்துடன் பணி நிலை நியமனங்களுக்கான அறிவித்தல்கள் வர்த்தமானி மற்றும் பத்திரிகைகளின் ஊடாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கமைவாகவே உரிய முறையில் தமக்கான நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தது என பாடசாலை சிற்றூழிய பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அவ்வாறே ஏனைய திணைக்களங்கள் ஊடாகவும் பணியாளர்கள் உள்ளீர்க்கப்பட்டிருந்தனர் எனவும் அவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கோவில் வீதி நல்லூரில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றிருந்த சந்திப்பின் போதே தமது பணி நிலைகளுக்கான நிரந்தர நியமனங்களை உறுதிப்படுத்தி பெற்று தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏனைய திணைக்கள பணியாளர்கள் நிரந்தர நியமனங்களை பெற்றும் கல்வி திணைக்களத்தின் கீழ் பணிகளை தொடரும் சிற்றூழிய பணியாளர்களுக்கான நிரந்தர நியமனங்கள் 6 வருடங்கள் ஆகியும் இதுவரையும் உறுதிப்படுத்தபடவில்லை என அவர்கள்கவலை வெளியிட்டுள்ளனர்.
நியமனங்களின் பின்பு தமது பணிகளையும்,அதன் பின்னராக தமது குடும்ப வாழ்க்கையினையும் இக்கட்டான சூழ் நிலைகளுக்கு மத்தியில் தமது பிள்ளைகளினது எதிர்கால கல்வி நடவடிக்கைகள் பாதிப்படையாமல் தொடர்வதற்கு நிரந்தர வழியை ஏற்படுத்தி தருமாறும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் போது கருத்து தெரிவித்த அங்கஜன் இராமநாதன் அவர்கள் நடவடிக்கை எடுப்பதாகவும் தமது அதிகாரிகளிடமும் நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
#யாழ் #பாடசாலை #பணியாளர்கள் #அங்கஜன்இராமநாதன் #சந்திப்பு