குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் புலமை பரிசில் ஊடாக வருமானம் குறைந்த விவசாய குடும்பத்தை சேர்ந்த உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்பட உள்ளது.
முழு நேர விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்களாகவும் , பெற்றோரில் ஒருவர் யாழ்.மாவட்டத்தில் உள்ள ஏதாவது கமக்கார அமைப்பில் உறுப்பினராகவும், 2020ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை எழுதும் மாணவராக இருப்பவர்கள் மாத்திரம் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
தகுதியுடையவர்கள் கமநல சேவைகள் திணைக்களத்தில் விண்ணப்பபடிவத்தை பெற்று , பெற்றோர் அங்கத்தவராக இருக்கும் கமக்கார அமைப்பு , கிராம சேவையாளர் , மாணவர்கள் கற்கும் பாடசாலை அதிபர் ஆகியோரின் பரிந்துரைகளுடன் எதிர்வரும் ஜூன் மாதம் 12ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்ப படிவம் கிடைக்குமாறு கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறு உதவி ஆணையாளர் இ.நிசாந்தன் கோரியுள்ளார்.
#குறைந்த வருமானமுடைய #விவசாய # உயர்தர மாணவர்களுக்கு #உதவி தொகை #scholarship