Home இலங்கை யாழ்.மாநகர சபை எல்லைக்குள் சமையலறை கழிவுகளை அகற்றும் புதிய நடைமுறை :

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் சமையலறை கழிவுகளை அகற்றும் புதிய நடைமுறை :

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யாழ்.மாநகர சபை எல்லைக்குள் உள்ள வீடுகளில் சேரும் சமையலறை கழிவுகளை அகற்றும் புதிய நடைமுறை ஒன்றினை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாக மாநகர முதல்வர் இ. ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

யாழ்.மாநகரின் தூய்மை , துர்நாற்றம் அற்ற சூழலை உருவாக்கும் நோக்குடன், வீட்டு திண்ம கழிவகற்றல் செயற்பாடுகள் தொடர்பில் புதிய பொறிமுறை ஒன்றினை உருவாக்கியுள்ளோம். அதன் அடிப்படையில் , திங்கட்கிழமை முதல் அதனை நடைமுறைப்படுத்தவுள்ளோம்.

அந்த வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சமையலறை கழிவுகளை அகற்றும் வாகனம் விசேட ஒலியினை எழுப்பியவாறு அதிகாலை 5 மணி முதல் மாநகர சபை எல்லைக்குள் வலம் வரும். அதன் போது குடியிருப்பாளர்கள் தமது வீட்டு சமையலறை கழிவுகளை மாத்திரம் அதன் மூலம் அகற்றலாம்.

சமையலறை கழிவுகளை ஊழியர்களிடம் கொடுக்கும் போது அதனுள் பிளாஸ்ரிக் , கண்ணாடி போன்ற வேற கழிவு பொருட்களை கொடுக்க வேண்டாம். சமையலறை கழிவுகளை மாத்திரம் போடுங்கள். வேறு கழிவுகளை போட்டால் , உரியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டப்பணமும் விதிக்கப்படும்.

ஏனைய கழிவுகளை இதுவரை நடைமுறையில் உள்ள கழிவகற்றல் பொறிமுறை ஊடாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

 #kitchen waste  #யாழ்.மாநகர சபை   #சமையலறை கழிவு #புதிய நடைமுறை #ஆர்னோல்ட்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More