கட்டாரில் 2022ஆம் இடம்பெறவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரை 48 அணிகளுக்கு விரிவுபடுத்தும் முன்மொழிவை சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் நிராகரித்துள்ளது.
முழுமையான கலந்தாலோசனையைத் தொடர்ந்து சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உலகக் கிண்ணத் தொடரை 48 அணிகளுக்குரியதாக விரிவுபடுத்த முடியாதெனவும் முன்னரே திட்டமிருந்தபடி 32 அணிகளுடன் கட்டாரில் 2022ஆம் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடரானது நடைபெறுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயல் நாடுகளான சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரேய்ன் போன்றவை கட்டார் மீதான தமது இரண்டாண்டு தடையினைத் தவிர்த்து, 2022ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரை நடாத்த வேண்டியிருந்தது.
இந்தநிலையில், உலகக் கிண்ணத் தொடரை 48 அணிகளுக்காக விரிவுபடுத்தும் தனது திட்டத்தை 2022ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் நடைமுறைப்படுத்தும் யோசனையை சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜியானி முன்னெடுத்திருந்தார்.
எனினும் உலகக் கிண்ணத்தை புறக்கணிக்கப்போவதாக ஐரோப்பாவின் முன்னணிக் காலப்ந்தாட்டக் கழகங்கள் தெரிவித்திருந்த நிலையிலேயே தற்போது மேற்குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
#உலகக் கிண்ணத் தொடர் #முன்மொழிவு #நிராகரிப்பு #worldcup