பங்களாதேசைச் சேர்ந்த ஜமாத்-உல்-முஜாகிதீன் பங்காளதேசம் என்ற பயங்கரவாத அமைப்புக்கு இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளது. பங்களாதேச தலைநகர் டாக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு இடம்பெற்ற தாக்குதலில் வெளிநாட்டினர் உள்பட 22 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இந்த தாக்குதலை நடத்திய ஜமாத்-உல்-முஜாகிதீன் பங்களாதேசம் என்ற அமைப்பு இந்தியாவிலும் சில தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
ஜமாத்-உல்-முஜாகிதீன் இந்தியா உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் இயங்கி வரும் இந்த அமைப்புக்கு மத்திய அரசு தற்போது தடை விதித்து உள்ளது. இந்த தகவலை உள்துறை அமைச்சு வெளியிட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது
#India #banned #Bangladesh #பங்களாதேசத்தை #இந்தியா #தடை