நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். நைஜீரியாவில் சில ஆண்டுகளாக அரசினை எதிர்த்து போகோ ஹராம் தீவிரவாதிகள் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அவர்களின் தாக்குதல்களில் 20,000 பேர் உயிரிழந்துள்ளதுடன் 2 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில் நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ராணுவ தளம் அருகில் போகோ ஹராம் அமைப்பினர் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் வந்து தாக்கியதில் 25 ராணுவத்தினர் உள்பட பொதுமக்கள் பலரும் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியானது.
மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதமாதகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
#army #bokoharam #Naigeria