Home இந்தியா உத்தரபிரதேச மாநிலத்தில் 3 சிறுவர்கள் சுட்டுக்கொலை

உத்தரபிரதேச மாநிலத்தில் 3 சிறுவர்கள் சுட்டுக்கொலை

by admin

உத்தரபிரதேச மாநிலத்தில் 3 சிறுவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவர்களது உடல்கள் ஒரு ஆழ்துளை கிணறு அருகே காணப்பட்டதாகவும் ஒவ்வொருவர் உடலிலும் தலா 2 குண்டுகள் துளைத்த காயங்கள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கொல்லப்பட்ட 3 பைசலாபாத் நகரை சேர்ந்த அஸ்மா, அலீம், அப்துல்லா எனவும் அவர்கள் அருகருகே வசித்து வந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

9 வயது முதல் 11 வயது வரை உள்ள அவர்களை நேற்று முன்தினம் இரவு முதல் காணவில்லை என அவர்களது பெற்றோர் காவல்துறையில் முறைப்பாடு செய்திருந்த போதுமட் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கடமை தவறிய 3 காவல்துறையினரை பணிநீக்கம் செய்த அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

#உத்தரபிரதேச  #சிறுவர்கள்  #சுட்டுக்கொலை

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More