Home இலங்கை வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலை ஊழியர்களின் விசாரணைகள் CIDயிடம்..

வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலை ஊழியர்களின் விசாரணைகள் CIDயிடம்..

by admin


பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலை ஊழியர்கள் 8 பேர் தொடர்பிலான விசாரணைகள் காவல் பயங்கரவாத தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இதற்காக பல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த சந்தேகநபர்களை நாளை 27ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த 8 சந்தேகநபர்கள் உட்பட 9 பேரை பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் கடந்த 6ஆம் திகதி உத்தரவு பிறப்பித்திருந்த போதும் ஒருவர் பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

உயித்த ஞாயிறுத் தாக்குதலுக்காக குண்டுகள் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வெல்லம்பிட்டி செப்புத்தொழிற்சாலையின் ஊழியர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை, தேசிய தௌஹித் ஜமாத் அமைப்புடன் தொடர்புகளைப் பேணியதான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற அலுவலக ஊழியர் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட கண்டியை சேர்ந்த 45 வயதான பாராளுமன்ற அலுவலக ஊழியரிடம் பயங்கரவாத விசாரணை பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற அதேவேளை அவலை 3 மாதங்களுக்கு தடுத்துவைத்து விசாரணை செய்ய காவல்துறையினருக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #வெல்லம்பிட்டியசெப்புத்தொழிற்சாலைஊழியர்கள் #கொழும்புமேலதிகநீதவான்நீதிமன்றம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More