முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிடிக்கப்படுகின்ற முதலைகளை வவுனிக்;குளத்தில் விடுவதற்கு மீனவர்களும் பிரதேச மக்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவு பகுதியில் இராணுவமுகாமிற்குள் புகுந்;த முதலை வனஜீவராசிகள் திணைக்களத்தினால் பிடிக்கப்பட்டு அவை வவுனிக்குளத்தில் விடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று முன்னரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பிடிக்கப்பட்ட முதலைகள் வவுனிக்குளத்தில் விடப்பட்டிருந்தன. அதாவது, முல்லைத்துPவு மாவட்டத்தில் மாந்தை கிழக்குதுணுக்காய் ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் வாழும் விவசாயிகளுக்கான நீர் விநியோகத்தை வழங்கும் ஒரு குளமாகவும் அதேவேளை நூற்றுக்கும் மேற்பட்ட நன்னீர் மீன்பிடித்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தொழிலாகவும் அமைந்துள்ளதுடன், பயிர்ச்செய்கை காலங்களில் குளத்தின் அலைகரைப்பகுதி கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகளாகவும் பயன்படுகின்றன.
இந்நிலையில்; குளத்தில் காணப்படுகின்ற முதலைப்பெருக்கத்தினால் மீனவர்களின் வலைகள் சேதமாக்கப்படுவதுடன், தமது தொழில்களும் பாதிக்கப்;படுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ள அதேநேரம் குளத்தை அண்மித்த பகுதிகளில் மேச்சலுக்காக விடப்படுகின்ற மற்றும் குளத்திற்கு நீர் தேடிச்செல்லும் கால்நடைகளை முதலைகள் இரையாக உட்கொள்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ள மீனவர்களும் பொதுமக்களும் வேறுபிரதேங்களில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய முதலைகளை இக்குளத்தில் விடுவது தொடர்பில் பலரும் எதிர்ப்புத்தெரிவித்துள்ளனர்
#வவுனிக்குளத்தில் #முதலைகள் #எதிர்ப்பு #முல்லைத்தீவு