அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள மார்ட்டின் ரவர் என்ற கட்டடம் சுமார் 16 வினாடிகளில் தகர்த்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது 219 கிலோ வெடிமருந்து பயன்படுத்தப்பட்டு சுமார் 16 வினாடிகளில் இந்த 16 ஆயிரம் தொன் கட்டடம் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. 1972-ஆம் ஆண்டு கட்டப்பட்ட21 மாடிகளை கொண்ட இந்தக் கட்டிடம் 16 ஆயிரம் தொன் எடை கொண்ட இரும்பினால் கட்டப்பட்டது.
அமெரிக்காவின் இரண்டாவது பெரிய இரும்பு உற்பத்தியாளர்கள் இந்த கட்டடத்தை பயன்படுத்தி வந்த நிலையில் அவர்களது வியாபாரம் நஸ்டமடைந்து விட்டதால் கடந்த 12 ஆண்டுகளாக இந்த கட்டடம் செயல்படாமல் இருந்து வந்தது.
இதையடுத்து இந்த கட்டடத்தை விலைக்கு வாங்கிய உரிமையாளர் அதனை புனரைமைக்க முற்பட்ட போதிலும் அது நடைபெறாமையினால் அதனை தரைமட்டமாக முடிவெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது