140
மன்னன் சங்கிலியனின் 400வதுஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியிலும் கிரியைகள் இடம்பெற்றன. கிளிநொச்சி உருத்திரபுரத்தில் அமைந்துள்ள சிவனாலயத்திற்கு அருகில் உள்ள நீர் தேக்கத்தில் குறித்த கிரியை இடம்பெற்றது. யாழ் ராட்சியத்தை ஆண்ட சங்கிலிய மன்னனின் 400வது ஆண்டு நினைவை முன்னிட்டு குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் வடமாகாண சபையின் முன்னால் உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தன். இதன்போது மன்னனிற்கு இந்து சமய முறையிலான கிரியைகள் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது. #கிளிநொச்சி #வடமாகாணசபை #உருத்திரபும்
Spread the love