தும்மலசூரிய – யதம்வெல பகுதியில் இராணுவம், காவற்துறையினர் இணைந்து நடத்திய சோதனையின்போது 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, 8 பெற்றோல் குண்டுகள், மோட்டார்சைக்கிள் மற்றும் 5,60,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. தும்மலசூரிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை, பேருவளை – மருதானை துறைமுக வீதிப்பகுதி மற்றும் மஹகொட உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் இராணுவ சீருடையை ஒத்த ஆடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. #தும்மலசூரிய #யதம்வெல #இராணுவம் #காவற்துறையினர்
தும்மலசூரியவில், முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 7 பேர் கைது…
194
Spread the love
previous post