பிரதான செய்திகள் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – ரபெல் நடால் -ஜோகோவிச் வெற்றி

பாரீஸ் நகரில் நடைபெற்று வருகின்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றுப் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் மற்றும் செர்பியாவின் ஜோகோவிச் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்

2-வது நாளான நேற்றையதினம் நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றுப் போட்டியில் , 11 முறை சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியரும் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ரபெல் நடால் ஜெர்மனியின் தகுதி சுற்று வீரர் யான்னிக் ஹன்ப்மனை எதிர்கொண்டு 6-2, 6-1, 6-3 என்ற நேர்செட்டில் வென்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்துள்ளார்.

அதேவேளை மற்றொரு போட்டியில் மதல்தர வீரரான நோவக் ஜோகோவிச் போலந்து வீரர் ஹூபெர்ட் ஹூர்காச்சை எதிர்கொண்டு 6-4, 6-2, 6-2 என்ற நேர்செட்டில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

#french open tennis  #nadal #Djokovic

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.