Home இந்தியா விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர வேண்டுமா? மத்திய அரசு தீர்ப்பாயம் அமைப்பு

விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர வேண்டுமா? மத்திய அரசு தீர்ப்பாயம் அமைப்பு

by admin

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை அண்மையில் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் இந்த தடை தொடர வேண்டுமா? என தீர்மானிப்பதற்காக இந்திய மத்திய அரசு , உயர்நீதிமன்ற நீதிபதி சங்கீதா திங்ரா ஷேகல தலைமையில் தீர்ப்பாயம் ஒன்றினை அமைத்துள்ளது.

தி 1991-ம் ஆண்டு முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை மத்திய அரசு தடை செய்ததுடன் இந்த தடை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடை தொடர்வதற்கு போதுமான காரணங்கள் இருக்கிறதா? இல்லையா? என்பது பற்றி தீர்மானிக்க மத்திய உள்துறை அமைச்சகத்தினால் குறித்த தீர்ப்பாயம் நியமிக்கப்பட்டுள்ளது.

#தமிழீழ  விடுதலைப் புலிகள்  #தடை #மத்திய அரசு #தீர்ப்பாயம் #ராஜீவ் காந்தி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More