197
அரச வைத்தியசாலைகளின் நிர்வாகம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதற்கு சுகாதார அமைச்சின் முன்அனுமதியை பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் பதில் பணிப்பாளர் நாயகம் இது தொடர்பான அறிவித்தலை சகல வைத்தியசாலைகளுக்கும் விடுத்துள்ளார். இதன் அடிப்படையில் வைத்தியசாலை நிர்வாகங்கள், ஊடகங்களுக்கு வைத்தியசாலை தொடர்பான தகவல்களை தெரிவிப்பதாக இருந்தால் சுகாதார அமைப்பின் அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
#வைத்தியசாலை #நிர்வாகம் #ஊடகங்களுக்கு #கருத்து
Spread the love