வவுனியா மாவட்டத்தின் பின்தங்கிய கிராமங்களாகக்காணப்படுகின்ற கோழியகுளம், மற்றும் வாருடையார் இலுப்பைக்குளம், ஆகிய கிராமங்களில் உள்ள பாடசாலைகள் செயலிழந்து பற்றைக்காடுகள் மண்டிக்காணப்படுகின்றன.
வவுனியா மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசங்களாக்காணப்படுகின்ற குஞ்சுக்குளம், நவ்வி, பாலமோட்டை, ஆகிய பிரதேசங்களை அண்டிய சிறிய விவசாயக்கிராமங்களில் வாழ்ந்து வருகின்ற மக்கள் அடிப்படை வசதிகளற்ற நிலையில் நீண்டகாலமாக வாழ்ந்து வருகின்றனர்
கடந்த 2010ம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்னர் இந்தப்பிரதேசங்களில் மக்கள் மீள்குடியேறிய நிலையில யுத்தத்தினால் சேதமடைந்து காணப்பட்ட கோழியகுளம் அ.த.க பாடசாலை புனர் நிர்மானம் செய்து திறந்து வைக்கப்பட்டபோதும் குறித்த பாடசாலை குறிப்பிட்ட காலத்தின் பின்னர் மூடப்பட்டுள்ளது. இதனால் இப்பாடசாலை கடந்த இரண்டு வருடங்களிற்கு மேலாக பற்றைக்காடுகள் வளர்ந்து காணப்படுகின்றது.
இதேபோல், இதற்கு அடுத்துள்ள கிராமமான வாரியுடையார் இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட பாடசாலையும் செயலிழந்து இன்று பற்றைக்காடுகள் மண்டிக்காணப்படுவதுடன், இன்னும் ஓரிரு வருடங்களில் இப்பாடசாலைகள் முழுமையாகவே பற்றகைளால்; மறைநது போகும் என பல்வேறு தரப்புக்களும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு இக்கிராமங்களில் உள்ள மாணவர்கள் இப்பிரதேசங்களில் பாடசாலைகள் மூடப்;பட்டமையால இங்கிருந்து நீண்ட தூரங்களிற்குச்சென்று கல்வி கற்கின்ற ஒரு நிலமை காணப்படுவதாக கவலை தெரிவித்துள்ளனர்.
#கோழியகுளம் #இலுப்பைக்குளம் #பாடசாலைகள் #செயலிழந்து #பற்றைக்காடு