188
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரசபை பொதுச் சந்தையைக் குத்தகைக்கு விடவேண்டாமென வலியுறுத்தி சந்தை வியாபாரிகள் இன்று கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சந்தை மூடப்பட்டு வெறிச்சோடிக் காணப்பட்டது. போராட்டத்துக்கு நகரப் பகுதி வர்த்தகர்களும் ஆதரவு தெரிவித்து வர்த்தக நிலையங்களை மூடியிருந்தனர்.
சந்தை முன்பாக ஒன்றுகூடிய வியாபாரிகள் பதாகைகள் ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்று நகரசபை முன்பாக நின்றனர். பின்னர் தவிசாளரிடம் மனுக் கையளித்தனர்.
#சாவகச்சேரி #பொதுச்சந்தை #குத்தகை #போராட்டம்
Spread the love