192
பாதிக்கப்பட்டோரும், பாதிக்கப்பட்டோரோடு பயணிப்போரும் இணைந்து பாதிக்கப்பட்டோரின் வாழ்வும், பயனும் குறித்து சுயமதிப்பீடு செய்யும் நோக்கோடு மாநாடு ஒன்றை றோட்டரிக் கழகம் யாழ்ப்பாணம் DATA அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்கின்றது.

இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழ்கின்ற பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை காலமும் சந்தித்தவையும், சாதித்தவையும் ஆராயப்படுவதோடு இனிவருங்காலங்களில் அவர்களது வாழ்வுப்பயணம் குறித்தான புரிதல் ஒன்றை ஏற்படுத்துவதும் இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாக இருக்கும்.
பாதிக்கப்பட்டோரை பின்வரும் நான்கு பிரிவுகளாக வகுத்து இந்த மாநாடு ஆராய விளைகின்றது.
1. மாற்றுத்திறனாளிகள்
2. பெற்றோரை இழந்த குழந்தைகள்
3. பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள்
4. பெண் தலைமைத்துவ குடும்பங்கள்
2. பெற்றோரை இழந்த குழந்தைகள்
3. பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள்
4. பெண் தலைமைத்துவ குடும்பங்கள்
பாதிக்கப்பட்டோர் தாமும் பெருமுயற்சியை எடுத்து வாழ்வில் எதிர்நீச்சல் போட்டு வாழ்ந்து வரும் இந்த நிலையில் அவர்களோடு பயணித்து அவர்களின் வாழ்வை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்காக பாடுபடும் பலர் நம்மோடு பயணிக்கின்றார்கள் குறிப்பாக,
1. அரச திணைக்களம்
2. மக்கள் பிரதிநிதிகள்
3. இலங்கையைத் தளமாகக் கொண்டியங்குகின்ற தொண்டு நிறுவனங்கள்
4. சர்வதேச தொண்டு நிறுவனங்கள்
2. மக்கள் பிரதிநிதிகள்
3. இலங்கையைத் தளமாகக் கொண்டியங்குகின்ற தொண்டு நிறுவனங்கள்
4. சர்வதேச தொண்டு நிறுவனங்கள்
ஆகியோரோடு கடல் கடந்து வாழ்கின்ற போதிலும் எம்மோடு பல்வேறுவகைகளில் பயணிக்கின்ற புலம்பெயர் மக்களின் பேரன்பும் பேருதவியும் பாதிக்கப்டோரை நோக்கி வந்த வண்ணம் இருக்கிறது, பெரும் ஆறுதலான ஒரு விடயம்.
அவ்வாறு பயணிப்போரின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டோரின் வாழ்வில் பெரிய நல்ல மாற்றம் முதல் குறிப்பிடத்தக்க மாற்றம் வரையிலான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது உண்மை. அதேவேளை உதவிகளை பெற்றுக் கொள்ளும் வலையமைப்புக்களிற்குள் இன்னமும் உள்வாங்ப்படாமல் மருந்துக்கும் வழியின்றி, உணவிற்கும் போராடி வாழ்கின்ற பலர் எமக்குள்ளேதான் இருக்கின்றார்கள். குறிப்பாக பாதிக்கப்பட்டோரை பெற்றோராக கொண்ட பிள்ளைகள் கல்வி கற்கும் நிலையில் இருந்தும் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்து சிறுவயதிலேயே தொழில் தேடி அவர்களின் குடும்பத்திற்காக உழைக்கின்ற பெரும் துர்ப்பாக்கியம் எமது சமூகத்துக்குள்ளேயே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
பாதிக்கப்பட்டோரின் பலதேவைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படாமலேயே இருக்கின்றது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகளின் அணுகும் வசதி இன்னமும் எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றது.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கின்ற உண்மையான, நேர்மையான, இலகுவில் தீர்த்துவைக்கக்கூடிய பல தேவைப்பாடுகள் குறித்தான சரியான புரிதல் ஒன்றை ஏற்படுத்துவது இன்றைய காலத்தின் ஒரு சாத்தியப்பாடான தேவையாக இருக்கின்றது. போர் முடிந்து பத்து வருடங்களில் பல்வேறு நலத்திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன இந்த வேளையில் பல அடிப்படைத் தேவைகள் குறித்தான சரியான புரிதல் இருந்தால் இன்னமும் சிறப்பாக இருக்கும் என்கின்ற ஒரே நோக்கத்தில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

பாதிக்கப்பட்டோரின் வாழ்வை நிர்ணயிக்கும் சக்தி படைத்தவர்கள் அதிகாரத்தில் உள்ளவர்கள் ஆற்றல் ஆர்வம் உள்ளவர்களில் பெரும்பாலானோர் இந்த மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர்.
1. ஆளுனர்
2. அரசஉயர்அதிகாரிகள்.
3. அரசஅதிபர்கள்மக்கள்பிரதிநிதிகளில்ஒருசிலர்
இந்த மாநாட்டிற்கு அழைக்கப்படுகின்றார்கள். அத்தோடு வடக்கு கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்டோரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டிற்கு அழைக்கப் படுகின்றார்கள்.

இந்த மாநாட்டில் பாதிக்கப்பட்டோர்களை வகைப்படுத்தி அவர்களிற்கிடையே குழுநிலை விவாதங்களை நடாத்தி அவர்களின் தேவைகளையும் அவர்களின் அபிலாசைகளையும் அவர்கள் கேட்டு நிற்பதையும் வெளிக்கொண்டு வரும் பிரகடனமும் இந்த மாநாட்டின் இறுதியில் வெளியிடப்படும். அவ்வாறு வெளியிடப்படும் கோரிக்கைகள் பகிரங்கப்படுத்தப்பட்டு அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்ற பேரவாவோடு இந்த மாநாட்டை நடாத்த விளைகின்றோம்.
இந்தமாநாட்டின் இருக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டவை மாநாட்டிக்கு நாங்கள் அழைக்கத் தவறிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் எம்மை அணுகலாம். இருக்கைகளின் இருப்புக்களின் எண்ணிக்கையில் அவர்கள் உள்வாங்கப்படுவார்கள். இம்முறை இந்த மாநாடு ஒரு ஆரம்ப நிகழ்வாக நடைபெறும் இனிவருங்காலங்களில் அரச அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், பாதிக்கப்பட்டோர், புலம்பெயர் நாட்டில் எமக்காக உழைக்கின்றவர்களின் பிரதிநிதிகள் அனைவரும் இணைந்து மிகப்பெரும்மாநாடுகளாக நடாத்தப்பட்டு அதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் தேவைகள் குறித்தான சரியான புரிதல் உருவாக்கப்பட்டு பாதிக்கப்பட்டோரின் வரழ்க்கையில் நல்லமாற்றம் உருவாக வேண்டும்.
#பாதிக்கப்பட்டோர் #வடக்கு கிழக்கு #மாற்றுத்திறனாளிகள் #ஆளுனர்
Spread the love