ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்காகவும், காயமடைந்தவர்களுக்காகவும் 160 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக இழப்பீட்டிற்கான அலுவலகம் அறிவித்துள்ளது.
உயிரிழந்த 162 பேரின் குடும்பத்தினருக்காக 138 மில்லியன் ரூபா வழங்கப்பட்டிருப்பதுடன் எஞ்சிய தொகை காயமடைந்த 193 பேருக்காக வழங்கப்பட்டுள்ளதாகவும் அரச தகவல் திணைக்களம் கூறுகின்றது.
சேதமடைந்த கத்தோலிக்க தேவாலயங்களை மறுசீரமைக்க அரசாங்கம் 25 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#பயங்கரவாத தாக்குதல் #இழப்பீடு #உயிர்த்த ஞாயிறு #eastersundaylk