272
களுத்துறையில் ஸ்ரீ தேவானந்தா மகாவித்தியாலாய மாணவர்களின் புத்தக பைகளை ஆசிரியர் ஒருவர் கரடி பொம்மை வேடமிட்டு சோதனை செய்தார். உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. அந்நிலையில் பாடசாலை செல்லும் மாணவர்களின் பாடசாலை பைகள் தினமும் பாடசாலை நுழைவாயிலில் வைத்து இராணுவத்தினர் , காவல்துறையினர்மற்றும் ஆசிரியர்கள் இணைந்து சோதனை செய்த பின்னரே பாடசாலைக்குள் மாணவர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
குறித்த சோதனை நடவடிக்கையின் போது மாணவர்களின் உணவு பொதிகளை சோதனையிடும் முறை , சோதனையிடுவோரின் சில விரும்பத்தகாத செயல்கள் என மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்திகள் காணப்பட்டு வந்தன.
இந்நிலையில் , களுத்துறையில் ஸ்ரீ தேவானந்தா மகாவித்தியாலாய ஆசிரியர் ஒருவர் கரடி பொம்மை வேடமணிந்து மாணவர்களை சோதனையிடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இந்த செயல் மாணவர்கள் மத்தியில் இருந்த பயத்தினை போக்கி அவர்களை மகிழ்வித்துள்ளது.
குறித்த ஆசிரியரின் செயலை பலரும் பாராட்டியுள்ளதுடன் அவரின் படங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிந்துள்ளனர். குறித்த படங்கள் தற்போது வைரலாகி உள்ளன.
#கரடி பொம்மை #வேடமணிந்து #மாணவர்களின் #புத்தக பைகள் #சோதனை #உயிர்த்த ஞாயிறு
Spread the love