இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாகூவினால் கூட்டணி அரசு அமைக்க முடியாமல் போனமையினைத் தொடர்ந்து இஸ்ரேலிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு சாதகமாக வாக்களித்துள்ளனர். இதன் காரணமாக புதிய தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் செப்ரம்பர் 17ம் திகதி புதிய தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
120 தொகுதிகளைக் கொண்ட இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற தேர்தலில் நெட்டன்யாகூவின் லிகுட் கட்சி 35 இடங்களில் மாத்திரமே வெறிற பெற்றிருந்த நிலையில் வலதுசாரி கூட்டணியை ஏற்படுத்தி ஆட்சி அமைக்க பெஞ்சமின் முயன்ற போதும் அவரால் அதற்கு முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது