தொலைக்காட்சி விவாதங்களில் செய்தித் தொடர்பாளர்கள் பங்கேற்பதற்கு ஒரு மாதம் காங்கிரஸ் கட்சி தடை விதித்துள்ளதாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா அறிவித்துள்ளார். பாராளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 352 தொகுதிகளை கைப்பற்றியுள்ள அதேவேளை காங்கிரஸ் குறைந்த இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதனையடுத்து தேர்தல் தோல்வி குறித்த் காங்கிரஸ் கட்சியின் பேரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தொலைக்காட்சி விவாதங்களில் செய்தித் தொடர்பாளர்கள் பங்கேற்க ஒரு மாதம் தடை விதித்து காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
#தொலைக்காட்சி #செய்தித் தொடர்பாளர்கள் # காங்கிரஸ் #தடை