பாலியல் தொல்லை கொடுத்தமை குறித்து முறைப்பாடு செய்தமைக்காக , 19 வயது மாணவி ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பங்களாதேசில் 16 பேர் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முறைப்பாடு செய்யப்பட்டு சில தினங்களின் பின்னர் பாடசாலையின் மொட்டைமாடியில் வைத்து நஸ்ரத் ஜகான் ரபி என்னும் குறித்த மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டி கொல்லப்பட்டிருந்தார்.
இந்தக் கொலை தொடர்பில் தலைமை ஆசிரியர் உட்பட 16 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியருக்கு எதிரான முறைப்பாட்டினை திரும்ப பெறுவதற்கு மாணவி மறுத்துவிட்டதால், சிறையில் இருந்து கொண்டே மாணவியை கொலை செய்யுமாறு தலைமை ஆசிரியர் ஆணையிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இறுதித் தேர்வு எழுத சென்ற மாணவியை, முகத்தையும், உடலையும் மறைத்துகொள்ளும் புர்கா அணிந்த குழு ஒன்று மொட்டைமாடிக்கு இழுத்து சென்று தீ வைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.80 சதவீதம் எரிந்த நிலையில் இருந்த உயிரிழப்பதற்கு முன்னர் வாக்குமூலம் வழங்கியிருந்த நிலையிலேயே நேற்றையதினம் 16 பேர் மீதும் கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கொலையை செய்ய ஆணையிட்டதாக நீதிமன்றத்தில் தலைமை ஆசிரியர் ஒப்புகொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ள நிலையில் சந்தேக நபர்கள் அனைவருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது
#பங்களாதேசில் #மாணவி #எரித்து கொலை #கொலைக்குற்றம் #நஸ்ரத் ஜகான் ரபி # Nusrat Jahan Rafi