கிளிநொச்சி செல்வா நகரில் கர்ப்பிணிப் பெண் உட்பட 10பேர் வெட்டிப் படுகாயப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேகநபர்கள் கிளிநொச்சி காவல்துறையினரால் கைது செய்யப்படுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களை காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.இதன்போது வாள்வெட்டுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் இரு வாள்கள் கூரிய ஆயுதங்கள் சில , கப் ரக வாகனம் ஒன்று மோட்டார் சைக்கள் ஒன்று என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வரும் கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
# கர்ப்பிணிப் பெண் #வாள்வெட்டு #சந்தேகநபர்கள் #கைது #கிளிநொச்சி