இரண்டாம் தர ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான ஐரோப்பிய லீக் தொடரில், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி சம்பியன் கிண்ணதினைக் கைப்பற்றியுள்ளது. அஸார்பைஜானில் நேற்றையதினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில், மற்றுமொரு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான ஆர்சனலுடன் போட்டியிட்ட செல்சி 4-1 என்ற கோல் கணக்கில் வென்று சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளது.
இப்போட்டியின் முதற்பாதியில் கோலெதுவும் பெறப்படாத நிலையில், சக பின்களவீரரான எமெர்ஸன் பல்மீரி வழங்கிய பந்தை இரண்டாவது பாதியின் நான்காவது நிமிடத்தில் தலையால் முட்டிக் கோலாக்கிய செல்சியின் முன்களவீரரான ஒலிவர் ஜிரூட், தனது அணிக்கு முன்னிலையை வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து செல்சி; மேலும் 3 கோல்களை போட்டு 4-1 என்ற கோல் கணக்கில் வென்று சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
#europa league #chelsea #champion #ஐரோப்பிய லீக் #செல்சி
Add Comment