கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீதிகள் மற்றும் பாலங்களைச் சீரமைக்கத் தமிழக அரசுக்கு 159 கோடி ரூபா நிதியுதவி வழங்குவதாக நபார்ட் வங்கி அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் கஜா புயலின் தாக்கத்தால் தமிழகத்தின் புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. விவசாய நிலங்கள் , வீதிகள் , பல்வேறு கட்டுமானங்களும் என்பன கடுமையாக சேதமடைந்திருந’;தன.
இந்தநிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீதிகள் மற்றும் பாலங்களைச் சீரமைப்பதற்காகத் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியான நபார்ட் வங்கி தமிழக அரசுக்கு 159 கோடி ரூபா நிதியுதவி வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த நிதியைக் கொண்டு கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமப்புறங்களில் உள்ள 147 வீதிகளும், 115 பாலங்களும் சீரமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சீரமைப்புப் பணிகளை, 2021 மார்ச் மாத நிறைவுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
நபார்ட் வங்கியுடன் உதவியுடன் தமிழகத்தில் பல்வேறு ஊரக உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
#kaja cyclone # கஜா புயல் #வீதிகள் #தமிழக அரசு #நிதியுதவி