முல்லைத்தீவு நாயாறு, பழைய செம்மலையில் அமைந்துள்ள நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் சிறப்பு பொங்கல் வழிபாடு இன்று நடைபெற்றுள்ளது. நீராவியடி கிராமத்தை சேர்ந்த மக்கள் தமது ஆலயத்தில் பொங்கல் பொங்கி வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த ஆலயத்தை அபகரித்து பௌத்த பிக்கு ஒருவர் குருகந்த ரஜமஹா விகாரை எனும் பெயரில் விகாரை ஒன்றை அமைத்துள்ளதுடன் பிரம்மாண்டமான புத்தர் சிலை ஒன்றினையும் அமைத்துள்ளார். இந்த விடயம் நீராவியடி மக்களை மாத்திரமின்றி, ஒட்டுமொத்த தமிழ் மக்களையே பெரும் அதிருப்திக்கு உள்ளாக்கியிருந்தது.
சர்சைக்குரிய இந்த ஆலயப் பிரச்சினை தொடர்பான வழக்கின் தீர்ப்பு இம்மாதம் 6ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்த நிலையில் ஆலயத்துக்கு சென்ற மக்களுக்கு மீண்டும் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இதனை தொடர்ந்து இன்று கிராம மக்கள் இணைந்து பொங்கல் பொங்கி, மோதகம் அவித்து அபிஷேகம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒரு புறம் இராணுவ முகாம், மறுபறுத்தில் பாரிய புத்தர் சிலை காணப்படுகின்ற நிலையில், தமது ஆலயம் மீதான ஆக்கிரமிப்புக்கள், தமது இன்னல்கள் யாவும் நீங்க வேண்டும் என்று வழிபாடுகளில் ஈடுட்ட மக்கள் வேண்டிக்கொண்டனர். #புத்தர்சிலை #நீராவியடி #ரஜமஹாவிகாரை