அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான அஸாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதவியிறக்க வேண்டும். ஹிஸ்புல்லாஹ் தேர்தலில் தோற்று, தேசிய பட்டியலில் பாராளுமன்றத்திற்கு வந்து பின்னர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்றளவில் இலங்கையில் ஒரு அரேபியாவைக் கட்டியெழுப்பியிருக்கிறார். எம்மால் இத்தகைய அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.
நாடு குறித்து சிந்திக்கின்ற முஸ்லிம்கள் இவற்றுக்கு எதிராகக் குரல்கொடுக்க வேண்டும் என்று நாங்கள் கோருகின்றோம். உங்களது சமூகத்திற்குள் காணப்படுகின்ற கொடூரத்தன்மை குறித்து நீங்கள் பேசவேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,
கேள்வி : சிங்கள உறுமய, ஜாதிக ஹெலஉறுமய போன்ற சிங்கள இனவாதக் கட்சிகளின் உருவாக்கத்தில் முன்நின்று செயற்பட்ட உங்களுக்கு முஸ்லிம் அடிப்படைவாதம் தொடர்பில் பேசுவதற்கு உரிமை இருக்கின்றதா?
பதில் : நாட்டில் விடுதலைப் புலிகளின் தீவிரவாதத்தைத் தோற்கடிப்பதற்கு நாங்கள் செயற்பட்டமையை இனவாதம் என்று சிலர் வரையறுக்கலாம். ஆனால், அப்போது நாட்டின் தேசியத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டிய தேவையேற்பட்ட போதும் நாம் அந்தக் கடமையை செய்தோம். அதேபோன்று தற்போது தோன்றியுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக செயற்பட வேண்டிய தேவையுள்ளது. அதிலிருந்து எவரும் விடுபட முடியும் என்று நான் கருதவில்லை.
கேள்வி : அவ்வாறெனின் வரலாற்றில் நீங்கள் தவறிழைக்கவில்லையா?
பதில் : வரலாற்றுத் தேவையின் நிமித்தம் ஜாதிக ஹெலஉறுமய தோற்றுவிக்கப்பட்டது என்றே நான் நினைக்கின்றேன். அது ஒரு இனவாதக் கட்சி என்று கூறுவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இலங்கை சர்வதேச ரீதியாக சிறுபான்மையினரைப் பலப்படுத்தி, நாட்டின் பிரதான இனக்குழுமத்தை பின்தள்ளியிருந்த ஒருபின்னணியிலேயே ஜாதிக ஹெலஉறுமய தோற்றம் பெற்றது. எனவே அது சிங்களவர்களின் நிமித்தம் உருவாக்கப்பட்ட கட்சியல்ல. மாறாக இந்நாட்டு உரிமையாளர்களின் நிமித்தம் உருவாக்கப்பட்ட தாகும்.
கேள்வி : இலங்கையைப் பொறுத்தவரையில் இஸ்லாமிய வஹாபிஸத்தின் நிலை எத்தகையதாக இருக்கின்றது?
பதில் : இவ்விடயம் தொடர்பில் எமது நாட்டின் ஆட்சியாளர்களுக்கு எவ்வித தெளிவும் காணப்படவில்லை. எதுவித தேசிய கொள்கையும் இருக்கவில்லை. நாடு, நாட்டின் எதிர்கால பாதுகாப்பு, நாட்டின் வரலாற்று ரீதியான மரபுரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பதை நோக்காகக் கொண்டு தீர்மானம் மேற்கொள்வதற்குப் பதிலாக நாங்கள் மேற்கொண்ட அரசியல் ரீதியான தீர்மானங்கள் இந்நிலைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.
கேள்வி : மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கம் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு நிதி வழங்கி போஷித்தார்கள் என்று தற்போதைய அரசாங்கம் கூறுகிறதே?
பதில் : ராஜபக் ஷ அரசாங்கம் அவர்களுக்கு நிதியளித்திருக்கும் என்பதை என்னால் நம்பமுடியாது. ஆனால், ஒன்றை மாத்திரம் கூறமுடியும். இப்பிரச்சினையின் பாரதூரத்தன்மையை ராஜபக் ஷ
அரசாங்கம் மிகச்சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. ஏனெனில் அவர்களது ஆட்சிக்
காலத்தில் அடிப்படைவாதிகள் மிகவும் சூட்சுமமான முறையில் அனைத்துத் துறைகளிலும் கால்பதித்து, தமது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டார்கள்.
கேள்வி : அதற்கு உதாரணங்கள் ஏதுமிருக்கின்றதா?
பதில் : ரிஷாத் பதியுதீன் தான் அதற்கு மிகச்
சிறந்த உதாரணம். அவர் கடந்த அரசாங்கத்தின் காலத்திலேயே இடங்களை கைப்பற்றிக்கொண்டார். கடந்த ஆட்சியில் அரச இயந்திரத்திற்கு அப்பாற்சென்று தன்னிச்சையாக தமக்கான அதிகாரங்களை ஏற்படுத்திக்கொள்வதற்கு அவர்களால் முடியுமாக இருந்தது. அதன் பாரதூரத்தன்மையை மஹிந்த அரசாங்கம் புரிந்துகொள்ளவில்லை.
கேள்வி : சிலர் சஹ்ரான் உள்ளிட்டோரை மதம் சார்ந்த அடிப்படைவாதிகள் என்றே குறிப்பிடுகின்றார்கள். இது மத அடிப்படைவாதமா? அல்லது அதையும் தாண்டிய வேறு ஏதேனும் ஒன்றா?
பதில் : சஹ்ரான் உள்ளிட்ட தற்கொலைக் குண்டுதாரிகளின் செயற்பாடுகள் சர்வதேச பயங்கரவாதச் செயற்பாடுகளின் ஓரங்கமாக இருக்கலாம். நாட்டிற்குள்ளும் அதற்கு அவசியமான பின்னணி காணப்பட்டது. சஹ்ரான் போன்றவர்கள் உருவாகுவதற்கு அவசியமான மதவாத அடிப்படை மிகவும் சக்திவாய்ந்த முறையில் கடந்த பலவருட காலமாக நாட்டிற்குள் கட்டியெழுப்பப்பட்டது என்றே நான் கருதுகின்றேன். ஆனால், இவ்விடயத்தில் எமது அரசியல்வாதிகள் குருடர்கள் போன்றே செயற்பட்டனர்.
கேள்வி : அந்தளவிற்கு பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டார்களா?
பதில் : ஆம். உதாரணமாக மதரஸா பாடசாலைகளை எடுத்துக்கொள்ளுங்கள். அவை முழுமையாக சட்டவிரோதமானவை. இவை ஞாயிறு அறநெறி பாடசாலைகள் அல்ல. மதகுருமாரை உருவாக்குவதற்காகவே இந்த மதரஸா பாடசாலைகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
இஸ்லாமிய மதம் அவ்வாறு பெரியளவில் மத குருமார்களை உருவாக்கும் தேவையுடைய மதமல்ல. அவ்வாறிருந்தும் விசேட மத பாடசாலைகள் என்ற வகையில் அடிப்படைவாதிகளை உருவாக்குவதற்கான செயற்பாடுகள் மதரஸா பாடசாலைகள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட போது நாம் அனைவரும் அமைதியாக இருந்தோம்.
நாட்டின் தேசிய கல்வித்திட்டத்தின் கீழ் மாணவர்கள் கற்கவேண்டும் என்று கூறுவது நியாயமானதாகும். 1968 ஆம் ஆண்டு சட்டத்தில் அனைத்து மாணவர்களும் நாட்டின் தேசிய கல்வியை மாத்திரமே பெறவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை மீறிய கல்விச்செயற்பாடு நாட்டில் இருக்க முடியாது. தற்போது இந்த மதரஸா பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்கள் எமது நாட்டிற்குச் சொந்தமில்லாத மாணவர்களாவர். இந்த அடிப்படைவாத
கல்விமுறையின் ஊடாக இதுவரை இலட்சக்
கணக்கான மாணவர்கள் உருவாகியிருக்கிறார்கள். நாடு குறித்த அபிமானம், உணர்வுபூர்வத்தன்மை, நாட்டின் பிரஜை என்ற அடிப்படை எண்ணம் என்பன கல்வியின் ஊடாகவே கட்டியெழுப்பப்படுகின்றன. அந்தக் கல்விமுறைக் கொள்கை
பூரணமாக வீழ்ச்சியடைவதற்கு கடந்த காலத்தில் நாம் இடம்வழங்கியிருக்கிறோம்.
கேள்வி : குருணாகல் வைத்தியசாலையில் பணியாற்றிய ஷாபி என்ற வைத்தியரின் செயற்பாடுகளும் இவற்றின் ஓர் அங்கமாக இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?
பதில் : உண்மையில் ஹிட்லரின் வதை முகாமில் இருந்த மொங்கலே என்ற வைத்தியரைப் போன்றவர் தான் ஷாபி என்றே நான் கருதுகின்றேன். அந்த மொங்கலே என்ற வைத்தியர் செய்ததை விட மிகவும் மோசமான குற்றத்தைத் தான் ஷாபி சஹாப்தீன் செய்திருக்கிறார்.நான் உண்மையைக் கூறுகின்றேன். கடந்த காலத்தில் சிங்களவர்களுக்கு கருக்கலைப்புச் செய்யும்
வெ வ்வேறு செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன என்று கூறப்பட்டதல்லவா? அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறும் வாய்ப்பில்லை என்றே அப்போது கருதினேன். நான் மிகவும் நடுநிலையாகவே சிந்தித்தேன். இவ்விடயங்கள் தொடர்பில் நாம் போதிய அளவிற்கு ஆராய்ந்து பார்க்கவில்லை என்று தோன்றுகிறது.
கேள்வி : அந்த வைத்தியர் திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் செயற்பட்டிருப்பார் என்று கருதுகிறீர்களா?
பதில் : ஆம்.. நிச்சயமாக. அந்த வைத்தியர் சுமார் இலட்சம் தாய்மாருக்கு இத்தகைய பாவத்தைச் செய்திருப்பார் என்றே நான் நம்புகின்றேன்.
கேள்வி : ஆனால் சட்டத்திற்கு முரணாக அதிக சொத்து சேர்த்துள்ளமை தொடர்பிலேயே குருணாகல் வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார். வேறு விடயங்கள் பற்றி வெளியாகவில்லையே?
பதில் : கைது செய்த பின்னர் தான் ஏனைய விடயங்கள் அம்பலமாகும். அந்த வைத்தியருக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்று ஆராயும் போது சவூதிஅரேபியாவிலிருந்து வந்திருப்பது தெரியவந்துள்ளது.
கேள்வி : அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் நீங்கள் கையெழுத்திட்டிருக்கிறீர்களா?
பதில் : ஆம். கூட்டு எதிரணி தான் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கையளித்தது. நான் அதில் கையெழுத்திட்டது மாத்திரமன்றி, அதன் பொருட்டு சக்திமிக்க முறையில் போராடுகின்றேன். இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர முடிந்ததே ஒருவித வெற்றிதான். குறிப்பாக ரிஷாத் பதியுதீன், அஸாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரைப் பதவியிறக்க வேண்டும்.
ஹிஸ்புல்லாஹ் தேர்தலில் தோற்று, தேசிய பட்டியலில் பாராளுமன்றத்திற்கு வந்து பின்னர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்றளவில் இலங்கையில் ஒரு அரேபியாவைக் கட்டியெழுப்பியிருக்கிறார்.
எம்மால் இத்தகைய அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. நாடு குறித்து சிந்திக்கின்ற முஸ்லிம்கள் இவற்றுக்கு எதிராகக் குரல்கொடுக்க வேண்டும் என்று நாங்கள் கோருகின்றோம். உங்களது சமூகத்திற்குள் காணப்படுகின்ற கொடூரத்தன்மை குறித்து நீங்கள் பேசவேண்டும். #ரிஷாத்பதியுதீன் #ஹிஸ்புல்லாஹ் #அத்துரலியேரத்னதேரர்
(நன்றி : லங்காதீப)
வீரகேசரி
(தமிழில் தனுஜா)