சூடானில் ஆர்ப்பாட்டத்தில் ராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் ஒரு குழந்தை உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளதுர்டன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் குறித்த தாக்குதலுக்கு ஐ;நா கண்டனம் வெளியிட்டுள்ளது
சூடான் தலைநகர் கர்டோமில் நிலவும் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் சிவில் ஆட்சியை கோரியும் பொதுமக்களால் அந்நாட்டு அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஆர்ப்பாட்டக்காhரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்திலேயே இவ்வாறு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்தநிலையில் போராட்டக்காரகளை அடக்க ராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் ஐ.நா. சபை பொது செயலாளர் அன்ரனியா குட்டரஸ் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். அத்துடன் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளும் இந்த தாக்குதலுக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளன.
மேலும் ; நாட்டில் தற்போது இடம்பெற்றுவரும் வன்முறை சம்பவங்களுக்கும் அதனால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கும் ஆளும் இராணுவம் பொறுப்புக்கூற வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
கடந்த 21 ஆம் திகதி முதல் பாரியளவான வேலைநிறுத்த போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் தற்போது வைத்திய துறை உட்பட பல்வேறு துறையினரும் அதில் தற்போது இணைந்துள்ளனர்.
சூடானிய முன்னாள் ஜனாதிபதி ஒமல் அல் பஷீரின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின் சூடானில் சுமுகமற்ற அரசியல் நிலைமை தொடர்ந்தும் நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
#sudan #protest #killed #சூடான் #ஆர்ப்பாட்டத்தில் #துப்பாக்கிப்பிரயோகம்,