சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பிற்பகல் 03.00 மணிக்கு பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட உள்ளது. இதேவேளை இன்று காலை 11.00 மணியளவில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளனர். இந்த நிலையில் பெரும்பாலும் எதிர்க்கட்சித் தலைவர் இன்று பாராளுமன்றத்தில் விஷேட உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். #mahindarajapaksa #சபாநாயகர்கருஜயசூரிய #மஹிந்தராஜபக்ஸ #தினேஷ்குணவர்தன #karujayasuriya
மகிந்த ராஜபக்ஸ பாராளுமன்றில் விசேட உரையாற்றுவார்?
167
Spread the love