காணாமல் போயுள்ள இந்திய விமானப்படை விமானத்தை தேடும் பணியை ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் 13 பேருடன் அசாம் மாநிலம் ஜோர்கத் விமானப்படை தளத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் மெஞ்சுகா பகுதியை நோக்கிச் சென்ற இந்திய விமானப்படையின் ஏஎன்-32 ரக விமானம் மெஞ்சுகா விமானப்படை தளத்தை சென்றடையவில்லை என்பதுடன் விமானத்துடனான தரைக் கட்டுப்பாட்டு நிலைய தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.
இதனையடுத்து காணாமல் போன விமானத்தை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்காக சுகோய் போர் விமானம் பணியில் ஈடுபடுத்தப்பட்டதுடன் ராணுவம் மற்றும் இந்தோ-திபெத் பாதுகாப்பு படையினரும் தேடும் பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
காணாமல் போயுள்ள இந்திய விமானப்படை விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது#காணாமல் போயுள்ள #இந்திய #விமானப்படை #ராணுவம்