போலந்து நாட்டைச் சேர்ந்த அலிக்ஜா வனாட்கோ என்ற 11 வயது சிறுமி ஒருவர் தனது விருப்பத்தினை கடிதமாக இந்தியப் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ளார். இவர் தனது தாய் மார்த்தாவுடன் கோவாவில் தங்கி பாடசாலையில் படித்து வந்துள்ள நிலையில் விசா முடிந்த பின்னரும் தங்கியதாக தெரிவித்து அவரது தாய் மார்த்தா நாடு கடத்தப்பட்டிருந்தார்.
இதையடுத்து சிறுமியை அழைத்துச் செல்வதற்காக தாய்க்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்ட நிலையில் கடந்த மார்ச் மாதம் 24ம் திகதி அலிக்ஜா அவரது தாயுடன் சொந்தநாடு திரும்பியிருந்தார்.
இந்நிலையில் மீண்டும் பிரதமராக பதவியேற்றுள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கடிதம் ஒன்றை மிகவும் உருக்கமாக எழுதியுள்ளார.
அவர் அந்த கடிதத்தில் ‘நான் கோவாவை மிகவும் நேசிக்கிறேன். அங்குள்ள விலங்கு மீட்பு மையத்தில் இணைந்து தன்னார்வ தொண்டு செய்து வந்தேன். அதனை நான் இழந்துவிட்டேன் ‘என உருக்கமாக பல தகவல்களை எழுதியுள்ளார்.
மேலும் தாயுடன் அங்குள்ள கேதர்நாத் கோவிலுக்கு சென்று வந்த அனுபவம் குறித்தும் எழுதியுள்ள அவர் இருவரின் விசா கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டு இருப்பதால் அதனை நீக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு மட்டுமின்றி புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற ஜெய்சங்கருக்கும் அவர் கடிதம் எழுதியுள்ள நிலையில் அவரது தாய் அக் கடிதத்தினை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
#போலந்துச் சிறுமி #பிரதமர் #மோடி # #கடிதம் #அலிக்ஜா வனாட்கோ