164
யாழில் உள்ள இராணுவ சோதனை சாவடிகளின் எண்ணிக்கைகளை குறைக்கவுள்ளதாக யாழ்.மாவட்ட கட்டளை தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி உறுதி அளித்துள்ளதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஏனைய பாகங்களில் இல்லாத அளவுக்கு வடக்கில் சோதனை சாவடிகள் அதிகமாக உள்ளதாகவும் , சோதனை சாவடிகளில் கெடுபிடிகள் இருப்பதாகவும் அமைச்சருக்கு முறைப்பாடுகள் கிடைக்க பெற்றதை அடுத்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அமைச்சர் கட்டளை தளபதியுடன் தொலைபேசியில் உரையாடினார்.
அதன் போது , தமிழ் மக்களை சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கெடுபிடிக்கு உள்ளாக்குவதாக கருத்து நிலவுவதாக அமைச்சர் தான் கூறியதாகவும் , அதற்கு கட்டளை தளபதி , ஐஎஸ் பயங்கரவாதம் மூலம் வடக்குக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என்பதே எம் கரிசனை. இப்போ நிலைமை சுமூகமாகி வருகிறது. சோதனை சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்கிறேன் என உறுதி அளித்ததாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
#யாழில் #இராணுவ #சோதனை சாவடி #தர்ஷன ஹெட்டியாராச்சி #மனோகணேசன்
Spread the love