Home உலகம் சம ஊதியம் வழங்குமாறு வலியுறுத்தி சுவிட்ஸர்லாந்தில் முதலாவது வேலைநிறுத்தப்போராட்டம்

சம ஊதியம் வழங்குமாறு வலியுறுத்தி சுவிட்ஸர்லாந்தில் முதலாவது வேலைநிறுத்தப்போராட்டம்

by admin


30 ஆண்டுகளின் பின்னர் சம ஊதியம் வழங்குமாறு வலியுறுத்தி சுவிட்ஸர்லாந்தில் முதலாவது வேலைநிறுத்தப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. சுவிட்ஸர்லாந்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சமமான ஊதியம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்து 1991ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் திகதி இறுதியாக வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் 30 வருடங்கள் கடந்தும் பெரியளவு மாற்றம் எதும் ஏற்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ள தொழிற்சங்கங்களும் மகளிர் உரிமைகள் அமைப்புகளும் சம உரிமை, சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது. எதிர்வரும் 14ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

சுவிட்ஸர்லாந்தில் பெண்களின் ஊதியம் ஆண்களின் ஊதியத்தை விட 20%குறைவாகவே உள்ளது. கல்வித்தகுதியும் துறை சார்ந்த அனுபவமும் சமமாக இருந்தாலும் சேவைக்காலத்தில், பெண் என்ற ஒரே காரணத்தினால் அதிக தொகையை அவர்கள் இழக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

#Women’s Strike  #Switzerland #சம ஊதியம்  ,  சுவிட்ஸர்லாந்தில்  , வேலைநிறுத்தப்போராட்டம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More