கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதாக, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 23 வயதான இளைஞர் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உள்ளதென அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளதனையடுத்து இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புனே பரிசோதனை மையத்தின் அறிக்கை இதனை உறுதிப்படுத்தி உள்ளது எனவும் நிபா வைரஸ் பாதிப்புகளை கவனிக்க தனி சிகிச்சை மையம் ஒதுக்கப்பட்டு உள்ளது எனவும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்
கேரளாவில் வெளவால்கள் மூலம் பரவும் நிபா வைரஸ் காய்ச்சல் காரணமாக கடந்த வருடம் 17 பேர் உயிரிழந்ததனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
#கேரளா #நிபா வைரஸ் #Nipah virus #Kerala