ஏபிசி என அழைக்கப்படுகின்ற அவுஸ்திரேலிய செய்தி நிறுவனத்தின் தலைமைக் காரியாலயத்தில் காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். குறித்த செய்தி நிறுவனத்தின் செய்தி ஆசிரியர் கவென் மொரிஸ் மற்றும் இரு ஊடகவியலாளர்கள் தொடர்பில் ஆராய்வதற்காகவே இவ்வாறு சோதனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அவுஸ்திரேலிய படையினரின் நடத்தை குறித்து தவறாகத் தொகுக்கப்பட்ட செய்தி குறித்து ஆராய்வதற்காகவே இவ்வாறு காவல்துறையினர் சுற்றிவளைப்பினை மேற்கொண்டு தேடுதல் மேற்கொண்டதாகவும் சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர்களின் வீடுகளிலும் நேற்றைய தினம் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 2017ஆம் ஆண்டு ஆப்கனில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் போர்க் குற்றங்களை மையப்படுத்தி வெளியிடப்பட்ட அறிக்கையில் ஆப்கன் பைல்ஸ் எனும் தொகுப்பில் இராணுவம் சம்பந்தப்பட்ட இரகசியத் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பி;டத்தக்கது.
#australian broadcasting corporation #அவுஸ்திரேலிய செய்தி நிறுவனத்தின் #தலைமைக் காரியாலயம் #சுற்றிவளைப்பு