12 ஆவது ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடரின் 8வது லீக் போட்டியில் இந்திய அணி; ஆறு விக்கெட்டுகளினால் தென்னாபிரிக்க அணியை வென்று முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது
நேற்று மாலை சவுத்தம்டனில் ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டூப்பிளஸ்ஸி தலைமையிலான தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுதாடி தீர்மானித்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 227 ஓட்டங்களை எடுத்திருந்தது.
டதனையடுத்து 228 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 47.3 ஓவர்களில் நான்கு விக்கெட்டுக்களை இழந்த நிலையில் ஆறு விக்கெட்டுகளினால் வெற்றியீட்டி தொடரில் முதல் வெற்றியை பெற்றுள்ளது. அதேவேளை தென்னாபிரிக்க அணி மூன்றாவது தோல்வியை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#இந்திய அணி #முதல் வெற்றி #தென்னாபிரிக்க அணி #விராட் கோலி