உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டு தாக்குதல்கள் தொடர்பில் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள 7 நீதிபதிகள் கொண்ட குழு ஒன்றை பிரதம நீதியரசர் நியமித்துள்ளார்.
குறித்த வழக்கு தொடர்பான மனு இன்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போNது இவ்வாறு குழு நியமிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த மனுக்கள் தொடர்பான விசாரணை ஜூலை 12 ஆம் திகதி இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#காவல்துறை மா அதிபர் #பாதுகாப்பு செயலாளர் #ஹேமசிறி பெர்ணாண்டோ #பூஜித் ஜயசுந்தர #உயிர்த்த ஞாயிறு #eastersundaylk