உலகிலேயே அதிக வெப்பமான நகரம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சுரு என தெரிய வந்துள்ளது. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக 120 பாகையைத் தாண்டி வெப்பம் நஜிலவி வருகின்றது. கடந்த 1ம் திகதி 124.5 பாகை வெப்பம் அப்பகுதியில் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் வேலை செய்யும் மக்கள் பலரும் தங்கள் கால அட்டவணையை மாற்றி கொண்டுள்ளதுடன் வாழ்க்கை முறையிலும் மாற்றம் செய்துள்ளனர். அங்கு மதிய வேளையில் உணவை தவிர்த்து வெறும் மோர் மட்டுமே குடித்து வருவதாகவும், தண்ணீர் இன்றி இருக்கவே முடியவில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் 10 கிலோ அளவிலான பனிக்கட்டிகளை வாங்கி வந்து ஏர்கூலர் இயந்திரத்திலும், தண்ணீர் தொட்டிகளிலும் தினமும் போட்டு வைப்பதாக தெரிவித்துள்ளனர்.
#உலகிலேயே #அதிக வெப்பமான #நகரம் #இந்தியா #சுரு