Home இலங்கை யாழில் சன நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் பட்டப்பகலில் கொள்ளை

யாழில் சன நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் பட்டப்பகலில் கொள்ளை

by admin


யாழில் சன நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியிலுள்ள வீடொன்றினுள் பகலில் புகுந்த திருடர்கள் 5 பவுண் நகை திருடி சென்றுள்ளனர். யாழ்.பெருமாள் கோவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த திருடர்களே நகைகளை திருடி சென்றுள்ளனர்.

வீட்டின் உரிமையாளர்களான கணவன் – மனைவி வேலைக்கு சென்றுள்ளனர். பிள்ளைகளும் பாடசாலை சென்றுள்ளனர். அச்சமயம் வீட்டில் யாருமற்ற வேளை புகுந்த திருடர்கள் வீட்டின்னுள் சல்லடை போட்டு தேடுதல் நடாத்தி வீட்டில் இருந்த 5 பவுண் நகையை திருடி சென்றுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரினால் யாழ்.காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கடைத்தொகுதிகள் காணப்படுவதுடன் , தனியார் கல்வி நிறுவனங்களும் காணப்படுவதனால் பகலில் சன நடமாட்டம் அதிகமாக இருக்கும். என்பது குறிப்பிடத்தக்கது

 #யாழ்  #சன நடமாட்டம்  #பட்டப்பகலில் #கொள்ளை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More